மேலும் செய்திகள்
குளமாக மாறிய சாலை சீரமைக்க வலியுறுத்தல்
26-Jan-2025
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் சேக்குபேட்டை கவரை தெருவில் இருந்து பேருந்து நிலையம் செல்வோர் மதுராந்தோட்டம் வழியாக சென்று வருகின்றனர்.வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் மிகுந்த இச்சாலையில், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி ஒட்டியுள்ள பகுதியியில், சாலையோரம் மழைநீர் செல்லும் கால்வாய் உள்ளது.கால்வாயில் சென்ற மழைநீரால் மண் அரிப்பு ஏற்பட்டு சாலையோரம் பள்ளம் ஏற்பட்டுள்ளது.இதனால், சாலை வளைவில் திரும்பும் இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகத்திற்கு வழிவிட ஒதுங்கும்போது, நிலை தடுமாறி, சாலையோர பள்ளத்தில் விழுந்து காயமடைகின்றனர். எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
26-Jan-2025