காலி பாட்டில்கள் வாங்கும் திட்டம்: சம்மேளனம் எதிர்ப்பு
காஞ்சிபுரம்:டாஸ்மாக்கில் காலி பாட்டில்கள் வாங்கும் திட்டத்தை அமல் படுத்த வேண்டாம் என, சம்மேளனம் மனு அளித்துள்ளது. காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்தில், 93 மதுபானக் கடைகள், 42 மதுக்கூடங்கள் இயங்கி வருகின்றன. தமிழகம் முழுதும் இன்று முதல், காலி பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, சி.ஐ.டி.யூ., டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளன பொதுச் செயலர் திருச்செல்வன் என்பவர், தமிழ்நாடு மாநில வாணிப கழக மேலாண் இயக்குநருக்கு அனுப்பிய மனுவில் கூறியதாவது: கா லி மது பாட்டில்கள் பெறும் போது, சுகாதாரமற்ற முறையில் இருப்பதால், ஊழியர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் வாய்ப்பு உள் ளது. மேலும், காலி பாட்டில்களை பாது காப்பதில் சிக்கல் உள்ளது. எனவே, சம்மேளன நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை செய்யும் வரையில், பிற மாவட்டங்களில் செயல் படுத்துவதை நிறுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.