உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காவணிப்பாக்கம் - கரும்பாக்கம் இடையே சாலை வசதி ஏற்படுத்த எதிர்பார்ப்பு

காவணிப்பாக்கம் - கரும்பாக்கம் இடையே சாலை வசதி ஏற்படுத்த எதிர்பார்ப்பு

கரும்பாக்கம்:உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூர் ஊராட்சிக்கு உட்பட்டது காவணிப்பாக்கம் கிராமம். இக்கிராமவாசிகள், வி.ஏ.ஒ., அலுவலகம் மற்றும் இந்தியன் வங்கி கிளை சார்ந்த சேவைகளுக்கு அருகாமையில் உள்ள கரும்பாக்கம் செல்கின்றனர்.காவணிப்பாக்கத்தில் இருந்து, கரும்பாக்கம் செல்ல, 3 கி.மீ., துாரம் இடைவெளி உள்ளதால், அப்பகுதியினர் தனியார் நிலங்களை பயன்படுத்தி, ஒத்தையடி பாதையில் நடந்து சென்று வரும் நிலை உள்ளது.இதேபோல, கரும்பாக்கம் பகுதியினரும், காவணிப்பாக்கம் சென்று வர தனியார் விவசாய நிலங்களையே பயன்படுத்தி வருகின்றனர்.இதனால், கரும்பாக்கம் - -காவணிப்பாக்கம் இடையே, பாதை வசதி ஏற்படுத்த வேண்டும் என, பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.இந்த இரு கிராமங்கள் இடையே, தனி நபர்களின் பட்டா நிலம் உள்ளதால், பாதை வசதி ஏற்படுத்துவதில் சிக்கல் நீடித்தது.இதனிடையே, கடந்த ஆண்டில், அப்பகுதிகளின் நில பட்டா உரிமையாளர்களிடம் சமரசம் பேசி, கரும்பாக்கம்-, காவணிப்பாக்கம் கிராமங்களின் இணைப்பாக ஊராட்சி நிர்வாகம் சார்பில் மண் பாதை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.எனினும், ஒரு சில நிலங்களின் பட்டாதாரர்கள், தங்களுக்கு சொந்தமான நிலத்தின் மீது, சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, சாலை பணி நிறுத்தப்பட்டுள்ளது.எனவே, காவணிப்பாக்கம் - கரும்பாக்கம் இடையிலான சாலை வசதிக்கு ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இரு கிராம மக்களும் எதிர்பார்த்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !