உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கண் சிகிச்சை முகாம்: 204 பேர் பயன்

கண் சிகிச்சை முகாம்: 204 பேர் பயன்

உத்திரமேரூர்;சாலவாக்கம் கண் சிகிச்சை முகாமில் 204 பேர் பயன் பெற்றனர். உத்திரமேரூர் தாலுகா, சாலவாக்கம் கிராமத்தில், மாமண்டூர் ரோட்டரி சங்கம், சாலவாக்கம் ஊராட்சி நிர்வாகம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை சென்னை சார்பில், இலவச கண் சிகிச்சை முகாம் ஊராட்சி தலைவர் சத்யா தலைமையில் நேற்று நடந்தது. ரோட்டரி சங்க தலைவர் சண்முகம் முன்னிலை வகித்தார். உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று முகாமை துவக்கி வைத்தார். முகாமில் பங்கேற்ற 204 பேரில், 40 பேருக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டது . அதை தொடர்ந்து, 27 பேர் கண் அறுவை சிகிச்சை செய்ய தேர்வு செய்யப்பட்டு சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி