உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குளத்தை துார்வாரி சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

குளத்தை துார்வாரி சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

உத்திரமேரூர்:காக்கநல்லுார் பொது குளத்தை துார்வாரி சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். உத்திரமேரூர் பேரூராட்சி, காக்கநல்லுாரில், பிரதான நிலத்தடி நீர் ஆதாரமாக கிராம பொது குளம் உள்ளது. விவசாயிகள் இந்த குளத்து தண்ணீரை கால்நடைகளுக்கு குடிநீராகவும் பயன்படுத்தி வந்தனர். தற்போது, இந்த குளம் பராமரிப்பு இல்லாமல் மண் துார்ந்த நிலையில் உள்ளது. மேலும், குளத்தில் செடிகள் வளர்ந்து உள்ளன. இதனால், கால்நடைகள் குளத்தில் இறங்கி தண்ணீர் குடிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. பருவ மழை தொடங்குவதற்கு முன், காக்கநல்லுார் கிராம பொது குளத்தை துார்வாரி சீரமைக்க, பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை