உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வரும் 22ல் விவசாயிகள் நலக்கூட்டம்

வரும் 22ல் விவசாயிகள் நலக்கூட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், வரும் 22ல், காலை 10:00 மணிக்கு நடைபெற உள்ளதாக கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.கலெக்டர் வளாக கூட்டரங்கில், நடைபெறும் இக்கூட்டத்தில், வேளாண்மை, தோட்டக்கலை, மின்வாரியம், கூட்டுறவு, வருவாய், கால்நடை உள்ளிட்ட துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். வேளாண்மை தொடர்பான அறிவுரைகளும், கோரிக்கைகளுக்கும் விளக்கம் அளிக்க உள்ளனர்.எனவே, காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை