உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / திறந்தநிலை மின்பெட்டியால் பள்ளி அருகே விபத்து அச்சம்

திறந்தநிலை மின்பெட்டியால் பள்ளி அருகே விபத்து அச்சம்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், மானாம்பதி கிராமத்தில், அரசு தொடக்க பள்ளி அருகே, உயர் மின்விளக்கு கோபுரம் உள்ளது. இந்த மின் விளக்கை இயக்க அருகிலேயே மின் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.தற்போது, மின் பெட்டி முறையாக பராமரிப்பு இல்லாததால், கதவுகள் உடைந்து காணப்படுகிறது. இதிலுள்ள மின் ஒயர்கள், பியூஸ் கேரியர் வாயிலாக மீட்டருடன் இணைக்கப்பட்டு, திறந்த நிலையிலே உள்ளது. பள்ளிக்கு வரும் குழந்தைகள் மின் பெட்டி அருகே, தினமும் விளையாடி வருகின்றனர். அப்போது, குழந்தைகள் எதிர்பாராதவிதமாக மின் ஒயரிலோ, மின் பெட்டியிலோ கை வைக்கும்போது மின்சாரம் பாய்ந்து, விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, திறந்துநிலையில் உள்ள மின்பெட்டியை சீரமைக்க, மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை