தடுப்பு இல்லாத சாலையால் அச்சம்
காஞ்சிபுரம், :காஞ்சிபுரம் மாநகராட்சி திருக்காலிமேடு, சின்னவேப்பங்குளத்தில் இருந்து, நேதாஜி நகர்வழியாக சின்ன காஞ்சிபுரம் சி.வி.ராஜகோபால் தெருவிற்கு செல்லும் வழியில் உள்ள அல்லாபாத் ஏரிஉள்ளது. சாலையோரம் உள்ள இந்த ஏரி 20 அடி ஆழம் உடையது. முறையான பராமரிப்பு இல்லாததால், ஏரிக்குள் செடி, கொடிகள் வளர்ந்துள்ளது.மேலும் கருவேல மரங்களும் வளர்ந்துள்ளது.ஏரிக்கரையோரம் உள்ள சாலைக்கு தடுப்புச்சுவர் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், இவ்வழியே செல்லும் பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவ - மாணவியர் கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போது, ஏரியில் தவறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.எனவே, விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில், அல்லாபாத் ஏரிக்கரையோரம் தடுப்புச்சுவர் அமைக்க மாநகராட்சி நிர்வாகம்நடவடிக்கை எடுக்கவேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்திஉள்ளனர்.