மேலும் செய்திகள்
தீ விபத்து: நகை, பணம் எரிந்து சேதம்
01-Dec-2024
கானாங்காட்டில் கூரை வீடு எரிந்து சேதம்
19-Nov-2024
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, பென்னலுார் கிராமம், செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம், 45. அதே பகுதியில் உள்ள தனியார் கல்லுாரில் ‛ஹவுஸ் கீப்பர்' வேலை செய்து வருகிறார். இவருக்கு, ஜெயந்தி, என்ற மனைவியும் இரு மகன்களும் உள்ளனர்.நேற்று காலை மகன்கள் இருவரும் கல்லுாரிக்கு சென்றனர். தம்பதி இருவரும் வேலைக்கு சென்றனர். தீடிரென குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது.இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் ஸ்ரீபெரும்புதுார் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் வீட்டில் இருந்த பீரோ, பேன், உள்ளிட்ட அனைத்து வீட்டு உபயோக பொருட்களும் தீயில் எரிந்து நாசமானது. பீரோவில் இருந்த துணி, ரேஷன், ஆதார் கார்டு என அனைத்து ஆவணங்களும் தீயில் எரிந்தன. ஸ்ரீபெரும்புதுார் போலீசார் தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
01-Dec-2024
19-Nov-2024