உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அய்யப்பன் கோவிலில் மலர் பூஜை விமரிசை

அய்யப்பன் கோவிலில் மலர் பூஜை விமரிசை

வாலாஜாபாத், வாலாஜாபாதில் அருள் தரும் அய்யப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் மலர் பூஜை விழா மற்றும் அன்ன தானம் பூஜை நடப்பது வழக்கம்.அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. அதை தொடர்ந்து, 7:00 மணிக்கு அன்ன தானம் அளிக்கப்பட்டது.காலை 10:00 மணிக்கு, நெய் அபிஷேகம் மற்றும் மகா அபிஷேகமும், 12:00 மணிக்கு பகல் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு, சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. அப்போது, மலர் அலங்காரத்தில் எழுந்தருளியஅய்யப்பன், முக்கிய வீதிகளில் உலா வந்தார்.தொடர்ந்து, இரவு 8:00 மணிக்கு, பஜனை பாடல்கள் மற்றும் மகா ஜோதி நிகழ்ச்சி நடந்தது.இதில், அய்யப்பன்பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.உத்திரமேரூர் இரட்டை தாலீஸ்வரர் கோவில் வளாகத்தில், அய்யப்பன் சன்னிதி உள்ளது.இங்கு, உத்திரமேரூர் அய்யப்பா சேவா சங்கம் சார்பில், 19-ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நேற்று காலை நடந்தது.முன்னதாக, மூலவருக்கு நெய், பால், இளநீர்,சந்தனம், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் சிறப்புஅபிஷேகம் செய்யப்பட்டது.தொடர்ந்து, பக்தர்கள்பஜனை பாடல்கள்பாடியவாறு, திருவிளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி