பண்ருட்டி ஊராட்சியில் உணவு கண்காட்சி
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்கு உட்பட்ட பண்ருட்டி ஊராட்சியில், மகளிர் தின விழா நேற்று நடந்தது. இதில், 22 மகளிர் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.மகளிருக்கான ஓட்டப்பந்தயம், பாட்டுப் போட்டி, கவிதை போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. மகளிர் சுயஉதவிக் குழுவினரால் தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருட்கள், இயற்கை உணவுகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிருக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.