மேலும் செய்திகள்
கைதிக்கு வலிப்பு ஜி.ஹெச்.,ல் 'அட்மிட்'
26-Sep-2024
வாலாஜாபாத்,:வாலாஜாபாத் ஒன்றியம், அளவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேசிகன், 65; ஓய்வு பெற்ற மின்வாரியத் துறை அலுவலர். இவர், கடந்த 17ம் தேதி, காஞ்சிபுரம்- - வாலாஜாபாத் சாலையில் சென்று கொண்டிருந்தார்.அப்போது, வாலாஜாபாத் மாசிலாமணி முதலியார் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே சென்றபோது, பின்னால் வந்த கனரக லாரி மோதியது. இதில், படுகாயம் அடைந்த தேசிகனை அப்பகுதியினர் மீட்டு, வாலாஜாபாத் வட்டார அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.அங்கு, நேற்று முன்தினம், அவர் உயிரிழந்தார். விபத்து குறித்து வாலாஜாபாத் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
26-Sep-2024