உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மின் கம்பியை மிதித்து ஆடு பலி

மின் கம்பியை மிதித்து ஆடு பலி

காஞ்சிபுரம்:அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த ஆடு, இறந்தது. காஞ்சிபுரம் ஒன்றியம், அங்கம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் மனைவி தானியம்மாள். இவருக்கு சொந்தமான, 25 ஆடுகளை நேற்று முன் தினம் மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றார். இதில் ஒரு ஆடு வீடு திரும்பவில்லை. நேற்று தானியம்மாள் ஆடுகளை தேடி சென்று உள்ளார். அப்போது, மண்டியாத்தா கோவில் அருகே, மின் கம்பி அறுந்து விழுந்ததில், ஆடு ஒன்று பலியாகி கிடப்பதை அறிந்து, இளையனார் வேலுார் மின் வாரியத்திற்கு தகவல் அளித்துள்ளார். நேற்று மாலை மின் வாரிய ஊழியர்கள், மின் கம்பியை துண்டித்து பின் இறந்த ஆட்டின் உடலை மீட்டு கொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ