உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  டிச., 29 முதல் கோமாரி தடுப்பூசி முகாம் 1.63 லட்சம் கால்நடைகளுக்கு இலக்கு

 டிச., 29 முதல் கோமாரி தடுப்பூசி முகாம் 1.63 லட்சம் கால்நடைகளுக்கு இலக்கு

காஞ்சிபுரம்: ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி வரும், 29 ம் தேதி முதல், ஜன., 28 வரை போட்டுக் கொள்ளலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திகுறிப்பு: கால்நடைகளுக்கு ஏற்படும் கோமாரி எனும் தொற்று நோயால், விவசாயிகளுக்கு கால்நடை இறப்பும், பொருளாதார இழப்பும் ஏற்படுகின்றன. பால் உற்பத்தி பாதிப்பு, மலட்டுத்தன்மை, கருச்சிதைவு, கால்நடைகளில் எடை குறைதல் போன்ற பாதிப்புகளும் கோமாரி நோயால் ஏற்படுகின்றன. எனவே, கால்நடைகளை தொற்று நோய்களில் இருந்து காப்பாற்றும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கோமாரி தடுப்பூசி போடப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, 1 லட்சத்து, 63,750 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் எட்டாம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி பணி, டிச., 29ல் துவங்கி, ஜன.,28 வரை நடைபெற உள்ளது. எனவே, பசுக்கள், எருது கள், எருமைகள் மற்றும் நான்கு மாதத்திற்கு மேற்பட்ட இளங்கன்றுகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என, அவற்றின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை