அரசு ஊழியர் சங்க வட்ட கிளை பேரவை கூட்டம்
உத்திரமேரூர், உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க உத்திரமேரூர் வட்டக் கிளை பேரவை கூட்டம் நடந்தது. உத்திரமேரூர் வட்டக்கிளை பேரவை கூட்டம், வட்ட தலைவர் பிரேம்குமார் தலைமையில் நேற்று நடந்தது. சங்க மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலர் மருதன் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலர் லெனின் சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மதிப்பூதியம், தொகுப்பூதியம் அடிப்படையில் நடக்கும் பணி நியமனத்தை முழுதுமாக கைவிட வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை வரன்முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டன.