உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஸ்ரீபெரும்புதுார் - சிப்காட் இடையே அரசு பேருந்து இயக்க வேண்டும்

ஸ்ரீபெரும்புதுார் - சிப்காட் இடையே அரசு பேருந்து இயக்க வேண்டும்

ஸ்ரீ பெரும்புதுார் அடுத்த, மாம்பாக்கம் சுற்றியுள்ள பகுதியில் அமைந்துள்ள சிப்காட்டில் 150க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இப்பகுதியில், 25,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள தொழிற்சாலையில் பணிபுரிவோர், கிராமத்தினர், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் பல்வேறு தேவைக்காக ஸ்ரீபெரும்புதுார் சென்று வருகின்றனர். ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து இப்பகுதிக்கு ஒரே ஒரு மினி பேருந்து மட்டுமே இயக்கப் படுகிறது. இப்பேருந்துக்கு 45 நிமிடம் முதல் 1:00 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே, சிப்காட் அமைந்துள்ள வல்லம், பால்நல்லுார், வல்லம் கண்டிகை, சேலையனுார், பானுார், மாலத்துார், மேட்டுப்பாளையம் வழியாக ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிலையத்திற்கு அதிகளவு அரசு பேருந்து இயக்க அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - எம்.ராஜசேகரன், ஸ்ரீபெரும்புதுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை