உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஜல்லி கற்கள் பெயர்ந்த சுடுகாடு சாலை

ஜல்லி கற்கள் பெயர்ந்த சுடுகாடு சாலை

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், காவாம்பயிர் ஊராட்சியில், அப்பையநல்லூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியினர் உயிரிழந்தால், அங்குள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்து வந்தனர்.இந்நிலையில், சுடுகாட்டிற்கு செல்லும் சாலையானது, சில ஆண்டுக்கு முன் போடப்பட்டது. சாலை முறையான பராமரிப்பு இல்லாமல், சேதமடைந்து ஜல்லிகள் பெயர்ந்து உள்ளது. இதனால், அவ்வழியே செல்வோர் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.சேதமடைந்த சாலையை சீரமைக்க கிராமத்தினர், ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.எனவே, சேதமடைந்த சுடுகாட்டு சாலையை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை