மேலும் செய்திகள்
குறைகேட்புக் கூட்டம்: 407 மனுக்கள் குவிந்தன
30-Sep-2025
காஞ்சிபுரம், காஞ்சிபுரத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், 455 பேரிடம் இருந்து, மனுக்களை காஞ்சிபுரம் கலெக்டர் பெற்றுக் கொண்டார். காஞ்சிபுரம் மக்கள் நல்லுறவு கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி, 455 பேரிடம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களிடம் கொடுத்த கலெக்டர், விரைவில் தீர்வு காணும்படி அறிவுறுத்தினார். இதில், எச்சூர் கிராம மக்கள் அளித்த மனு: எச்சூர் கிராமத்தில், 1,000 ஏக்கர் நஞ்சை நிலத்தில், விவசாயிகள் நெல் பயிரிட்டு வந்தோம். இதில், 500 ஏக்கரை சிப்காட் நிலமாக அரசு அறிவித்து உள்ளது. விவசாயத்தை நம்பி வாழ்வாதாரமாக இருக்கும் எங்கள் நிலங்களை கையகப்படுத்துவதை, அரசு தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
30-Sep-2025