உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மின்சாரம் தாக்கி காவலாளி பலி

மின்சாரம் தாக்கி காவலாளி பலி

ஸ்ரீபெரும்புதுார்:அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ண கோகோய், 27. இவர், ஸ்ரீபெரும்புதுார் அருகே தண்டலத்தில் தங்கி, அதே பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.வீட்டின் குளியல் அறையில் உள்ள சுவிட்சை, நேற்று காலை ஆன் செய்த போது, மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தார். உடன் தங்கி இருந்தவர்கள் மீட்டு, அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.மருத்துவர்கள் பரிசோதனையில், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். ஸ்ரீபெரும்புதுார் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ