உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பிளஸ் 2 முடித்த மாணவ - மாணவியருக்கு உயர்கல்வி குறித்து வழிகாட்டல் நிகழ்ச்சி

பிளஸ் 2 முடித்த மாணவ - மாணவியருக்கு உயர்கல்வி குறித்து வழிகாட்டல் நிகழ்ச்சி

ஏனாத்துார்:பிளஸ் 2 முடித்த மாணவ - மாணவியர் மற்றும் இளங்கலை பட்டம் முடித்த மாணவ - மாணவியருக்கான உயர் கல்வி குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சீ, காஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துாரில் உள்ள ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா நிகர்நிலைப் பல்கலையில், நேற்று நடந்தது.மாணவர் சேர்க்கை குழு தலைவர் மற்றும் அறிவியல், கல்வியியல் பிரிவு புல தலைவர் பேராசிரியர் வெங்கட்ரமணன் வரவேற்றார். துணைவேந்தர் பேராசிரியர் சீனிவாசு தலைமை வகித்தார்.சிறப்பு பேச்சாளராக பங்கேற்ற அஸ்வின், மாணவர்கள் தங்களின் திறன்களை அடையாளம் கண்டு, அத்துறையைத் தேர்ந்தெடுத்து, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி எவ்வாறு வெற்றி பெறலாம் என்பதையும், கல்வி மற்றும் தொழில் தேர்வுகளில் விண்ணப்பிக்க வழிமுறையை எடுத்துரைத்தார். பேராசிரியர் ராஜ்மோகன் நன்றி கூறினார்.இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சார்ந்த பல்வேறு பள்ளி மாணவ - மாணவியர் பெற்றோர், ஆசிரியர்கள் என, 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை