மேலும் செய்திகள்
6 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
13-Sep-2025
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, விற்பனைக்காக வீட்டில் குட்காவை பதுக்கி வைத்திருந்த கணவன், மனைவி மற்றும் மகன் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். ஸ்ரீபெரும்புதுார் அருகே, மேவலுார்குப்பம் கிராமத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை, வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வ தாக ஸ்ரீபெரும்புதுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, நேற்று முன்தினம், மேவலுார்குப்பம், கங்கையம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதில், ஹான்ஸ், ஸ்வாகத், விமல், கூல் லிப் உள்ளிட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து, 20,000 ரூபாய் மதிப்புள்ள 6 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், வீட்டின் உரிமையாளர் வெயில்முத்து, 58, அவரது மனைவி சாந்தி, 53, மற்றும் மகன் சத்தீஷ்குமார், 30, ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
13-Sep-2025