உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது

உத்திரமேரூர்,குண்ணவாக்கம் கிராமத்தில் பெட்டிக்கடையில் சோதனை செய்த போலீசார், 33 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, உரிமையாளரை கைது செய்தனர். உத்திரமேரூர் தாலுகா, குண்ணவாக்கம், மருதம், கடல்மங்கலம் ஆகிய பகுதிகளில், உத்திரமேரூர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, குண்ணவாக்கம் கிராமத்தில் குளக்கரை தெருவில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில் சந்தேகத்தின்படி, போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அதில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்கு மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து, கடையின் உரிமையாளரான ரகு, 54, என்பவரை உத்திரமேரூர் போலீசார் கைது செய்து, 33 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி