உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காவிதண்டலம் கூட்டுச்சாலையில் குப்பை குவியலால் சுகாதார சீர்கேடு

காவிதண்டலம் கூட்டுச்சாலையில் குப்பை குவியலால் சுகாதார சீர்கேடு

காவிதண்டலம்:காவிதண்டலம் கூட்டுச்சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பையால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. உத்திரமேரூர் ஒன்றியம், களியப்பேட்டையில் இருந்து, காவிதண்டலம் வழியாக, ஒரக்காட்டுப்பேட்டை செல்லும் சாலை உள்ளது. களியப்பேட்டை சுற்றியுள்ள கிராம மக்கள் இச்சாலை வழியை பயன்படுத்தி செங்கல்பட்டு சென்று வருகின்றனர். இச்சாலையில், காவிதண்டலம் கூட்டுச்சாலை பகுதி உள்ளது. காவிதண்டலத்தில் செயல்படும் உணவகம், இறைச்சி கடை மற்றும் காய்கறி கடைகளில் இருந்து வெளியேற்றும் குப்பை கழிவுகளை கூட்டுச்சாலையோரத்தில் கொட்டி வருகின்றனர். இதனால், அப்பகுதி குப்பை கிடங்காக மாறி துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக நடந்து செல்வோர் முகம் சுளிக்கின்றனர். மேலும், இக்குப்பையால் கொசு உற்பத்தி, தொற்று நோய் போன்ற சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, காவிதண்டலம் கூட்டுச்சாலையோரத்தில் குவிந்துள்ள குப்பையை அகற்றுவதோடு இனி குப்பை கொட்டுவதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை