உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பழையசீவரம் பேருந்து நிறுத்தத்தில் உயர்கோபுர மின்விளக்கு அமைப்பு

பழையசீவரம் பேருந்து நிறுத்தத்தில் உயர்கோபுர மின்விளக்கு அமைப்பு

வாலாஜாபாத்:வாலாஜாபாத்- செங்கல்பட்டு சாலையில் பழையசீவரம் உள்ளது. பழையசீவரம் மற்றும் பாலாற்றின் மறு கரையில் உள்ள திருமுக்கூடல், புல்லம்பாக்கம், மதுார், அருங்குன்றம், பட்டா, சிறுதாமூர், சித்தாலப்பாக்கம், சிறுமையிலுார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தோர், பழையசீவரம் மலை பேருந்து நிறுத்தத்திற்கு வந்து, அங்கிருந்து பேருந்து பிடித்து, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.பழையசீவரம் மலை பேருந்து நிறுத்தத்தில், இரவு 10:00 மணி வரையிலும், அதிகாலை நேரங்களிலும் பயணியர் வருகை உள்ளது.இந்த பேருந்து நிறுத்தத்தில் போதிய மின் வசதி இல்லாததால், இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து, பயணியர் அவதிக்குள்ளாகின்றனர். இதனால், அப்பேருந்து நிறுத்த பகுதியில் கோபுர மின்விளக்கு வசதி ஏற்படுத்த பல தரப்பினரும் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில், உயர் கோபுர மின் விளக்கு வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை