மேலும் செய்திகள்
மக்காச்சோள தட்டை சாகுபடியில் தண்டரை விவசாயிகள் ஆர்வம்
1 minutes ago
வேலை வாய்ப்பு முகாமில் 2,072 பேர் பங்கேற்பு
2 minutes ago
உதவி பேராசிரியர் தேர்வில் 46 பேர் ஆப்சன்ட்
13 minutes ago
காஞ்சிபுரம்: நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, ஓரிக்கையில் சேதமான சாலையை நெடுஞ்சாலை துறையினர் சீரமைத்துள்ளனர் காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, ஓரிக்கை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், மாரியம்மன் கோவில் தெரு அருகில், கடந்த மாதம் பெய்த மழையின் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு சாலையோரம் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, நெடுஞ்சாலை துறை சார்பில், சேதமான சாலை பேட்ச் ஒர்க்' பணியாக சீரமைக்கப்பட்டுள்ளது.
1 minutes ago
2 minutes ago
13 minutes ago