ஹாக்கி போட்டி உத்தரகண்ட் அசத்தல்
சென்னை: தேசிய அளவில் நடந்து வரும் ஆடவருக்கான சப் - ஜூனியர் ஹாக்கி போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், உத்தரகண்ட் அணி 27 கோல் அடித்து அபார வெற்றி பெற்றது. ஹாக்கி இந்தியா மற்றும் ஹாக்கி யுனிட் ஆப் தமிழ்நாடு இணைந்து, தேசிய அளவில் ஆடவருக்கான '15வது தேசிய சப் - ஜூனியர் சாம்பியன்ஷிப் - 2025' போட்டி, சென்னை, எழும்பூர் ராதாகிருஷ்னா ஹாக்கி அரங்கில் நேற்று துவங்கியது. நாட்டின் 29 அணிகள், நான்கு டிவிஷனாக போட்டியிடுகின்றன. https://x.com/dinamalarweb/status/1949995319837806992/photo/1