மேலும் செய்திகள்
பாஜ தலைமையை விமர்சிக்கும் மேற்கு வங்க எம்பி
30-Nov-2025
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கவுசிகேஸ்வரர் கோவிலில், உலக நன்மைக்காக 10 நாட்கள் நடைபெறும் தசமஹா வித்யா ஹோமம் நேற்று துவங்கியது. காஞ்சிபுரம் ஸ்ரீவித்யா காமாட்சி பூஜா டிரஸ்ட் சார்பில், ஆண்டுதோறும் உலக நன்மைக்காக காஞ்சிபுரம் கவுசிகேஸ்வரர் கோவிலில் 10 நாட்கள் தசமஹா வித்யா ஹோமம் நடத்தப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் தலைமை ஸ்தானீகம் நடராஜ சாஸ்திகள் தலைமையில் நேற்று துவங்கியது. மஹா காளி ஹோமம், கன்யா பூஜை, சுவாசினி பூஜை நடந்தது. இன்று ஸ்ரீதாரா ஹோமம், நாளை லலிதா ஹோமம் என, தொடர்ந்து புவனேஸ்வரி ஹோமம், ஸ்ரீபைரவி ஹோமம், ராஜமாதங்கி ஹோமம் என, வரும் 31ம் தேதி வரை ஹோமம் நடக்கிறது. தினமும் மாலையில் ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம், மந்திரபுஷ்பம் ஆரத்தி நடக்கிறது.
30-Nov-2025