மேலும் செய்திகள்
அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
15-Nov-2024
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்கம் சார்பில், மருத்துவர்கள் மக்கள் மன்றம் துவக்க விழா நடந்தது.காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் மனோகரன் வரவேற்றார். இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு மாநில கிளைத் தலைவர் டாக்டர் அபுல் ஹசன் தலைமை வகித்து, 'மருத்துவர்கள் மற்றும் பொது மக்களுக்கிடையான நல்லுறவை பேணுவதற்கும், சமூக ஊடகங்களில் பரவும் தவறான மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்த தெளிவை பொதுமக்களிடையே ஏற்படுத்தவும் இம்மன்றம் மாதம்தோறும் கூட உள்ளது' என்றார்.தமிழ்நாடு மாநில வடக்கு மண்டல துணைத் தலைவர் டாக்டர் காசி முன்னிலை வகித்தார். காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி குத்துவிளக்கு ஏற்றி, மருத்துவர்கள் மக்கள் மன்றத்தைத் துவக்கி வைத்தார்.
15-Nov-2024