உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சந்தவேலுார் அரசு பள்ளியில் கூடுதல் கட்டடம் திறப்பு

சந்தவேலுார் அரசு பள்ளியில் கூடுதல் கட்டடம் திறப்பு

ஸ்ரீபெரும்புதுார்:சந்தவேலுார் ஊராட்சி அரசு தொடக்கப் பள்ளியில், 19.50 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடத்தை ஸ்ரீபெரும்புதுார் எம்,எல்.ஏ., திறந்து வைத்தார்.ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்குட்பட்ட சந்தவேலுார் ஊராட்சியில் அரசு தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. 100க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வகின்றனர். இந்த பள்ளியில் ஸ்ரீபெரும்புதுார் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 19.50 லட்சம் ரூபாய் மதிப்பில் இரண்டு வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டது.பணிகள் முடிவடைந்த நிலையில், ஸ்ரீபெரும்புதுார் எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை நேற்று திறந்து வைத்தார். வட்டார கல்வி அலுவலர்கள் விஜயலட்சுமி, பள்ளி தலைமை ஆசிரியர் மகலாட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை