உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பாலாற்றங்கரையில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு சமூக ஆர்வலர்கள் வேதனை

பாலாற்றங்கரையில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு சமூக ஆர்வலர்கள் வேதனை

வாலாஜாபாத்:காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையில், வாலாஜாபாத் அடுத்து புளியம்பாக்கம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தின் பாலாற்றங்கரையொட்டி, பல ஏக்கர் பரப்பிலான நீர்நிலை புறம்போக்கு நிலங்கள் உள்ளன.கடந்த சில ஆண்டுகளாக உள்ளூர் மற்றும் வெளியூர் வாசிகள், இங்கு வீடுகள் கட்டி குடியிருப்பு பகுதிகளாக மாற்றி வருகின்றனர். இங்குள்ள புறம்போக்கு நிலங்களை சிலர் விற்பனை செய்வதாகவும் கூறப்படுகிறது.மேலும், இப்பதிக்கு அருகே வாலாஜாபாத் பேரூராட்சி, 15வது வார்டுக்கு உட்பட்ட ஆற்றங்கரை தெரு உள்ளது. இத்தெரு பகுதியிலும், பாலாற்றங்கரையை ஒட்டிய புறம்போக்கு நிலங்களை சிலர் ஆக்கிரமித்து, தொடர்ந்து கட்டங்கள் ஏற்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனால், பாலாற்றில் வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை பேரிடர் சமயங்களில், குடியிருப்புகளை வெள்ளநீர் சூழும் அபாயம் உள்ளதாக, சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது:புளியம்பாக்கம் மற்றும் வாலாஜாபாத் பேரூராட்சியில் உள்ள 15வது வார்டு பகுதியில், பாலாற்றங்கரையோர நீர்நிலை புறம்போக்கு நிலங்களில் குடிசைகள் மற்றும் கான்கிரீட் வீடுகள் கட்டி ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது.நீர்நிலை புறம்போக்கு நிலங்களில் குடியிருக்க நீதிமன்றம் தடை விதித்தும், இப்பகுதிகளில் சட்ட விரோதமாக ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. எனவே, விதிமுறைகளை மீறிய இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை