உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி காமாட்சியம்மன் கோவிலை சுற்றிலும் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் புகார்

காஞ்சி காமாட்சியம்மன் கோவிலை சுற்றிலும் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் புகார்

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாக கூட்டரங்கில், மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று காலை 11:00 மணிக்கு நடந்தது.இதில், பட்டா, வேலைவாய்ப்பு, பட்டா திருத்தம், ஆக்கிரமிப்பு அகற்றுதல் என, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 436 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்ற கலெக்டர் கலைச்செல்வி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இரு மாற்றுத்திறனாளிகளுக்கு 2.39 லட்சம் ரூபாய் மதிப்பிலான பெட்ரோல் ஸ்கூட்டரும், ஒருவருக்கு காதொலி கருவியையும், கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார்.இக்கூட்டத்தில், காமாட்சியம்மன் கோவில் சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்புகளால் வாகன நெரிசல் ஏற்படுவதாக, காங்கிரஸ் கட்சியின் கிராமதொழிலாளர் சம்மேளனம் மாவட்ட தலைவர் சீனிவாசன் மனு அளித்துள்ளார். மனுவில் கூறியிருப்பதாவது: காமாட்சியம்மன் கோவில் சுற்றிலும் சாலையை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. நடைபாதையிலும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முக்கிய பிரமுகர்கள் வரும்போது மட்டும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதாக கண்துடைப்புக்காக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், முறையாக ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. வாகனங்கள் எளிதாக சென்று வரும் வகையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.மேலும், அனைத்து சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். அதில், ஓய்வு பெற்ற ஊழியர்களின் ஊக்க ஊதிய தொகையை இதுவரை வழங்கவில்லை என்றும், மாதந்தோறும் முறையாக ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை