மேலும் செய்திகள்
லட்சுமிபுரத்தில் நிழற்குடை அமைக்க கோரிக்கை
25-Aug-2025
பயணியர் நிழற்குடை அமைக்க கோரிக்கை
25-Aug-2025
உத்திரமேரூர்:வாடாதவூரில் பயணியர் நிழற்குடை அமைக்க கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர். உத்திரமேரூர் ஒன்றியம், வாடாதவூர் கிராமத்தில் 2,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்கள் திருப்புலிவனம் -- சாலவாக்கம் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு சென்று பேருந்து ஏறி செல்கின்றனர். இப்பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை இல்லை. இதனால், கிராம மக்கள், மாணவ - மாணவியர் நீண்ட நேரம் காத்திருந்து பேருந்து பிடித்து செல்கின்றனர். மழை மற்றும் வெயில் நேரங்களில் பயணியர் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, வாடாதவூரில் பயணியர் நிழற்குடை அமைக்க, ஊரக வளர்ச்சி துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
25-Aug-2025
25-Aug-2025