உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கான்கிரீட் மழைநீர் கால்வாய் அமைக்க வலியுறுத்தல்

கான்கிரீட் மழைநீர் கால்வாய் அமைக்க வலியுறுத்தல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, 46வது வார்டு, ஓரிக்கை, காந்தி நகர் 2வது தெருவில், பெய்யும் மழைநீர், காஞ்சிபுரம் -- உத்திரமேரூர் சாலையோரம் மண் கால்வாயாக இருக்கிறது. அதனால், கால்வாயில் புல் முளைத்து அகலம் குறைந்து துார்ந்த நிலையில் உள்ளது. மழைநீர் முழுமையாக வெளியேறாமல் கால்வாயில் தேங்கும் நிலை உள்ளது.ஒரே இடத்தில் தேங்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகும் சூழல் உள்ளதால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.எனவே, காந்தி நகரில், மூடி வசதியுடன் கான்கிரீட் கால்வாய் அமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை