உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / களியாம்பூண்டி வாரச்சந்தையில் தகர கூரை அமைக்க வலியுறுத்தல்

களியாம்பூண்டி வாரச்சந்தையில் தகர கூரை அமைக்க வலியுறுத்தல்

உத்திரமேரூர்:களியாம்பூண்டி வாரச்சந்தையில், கடைகளுக்கு தகர கூரை அமைக்க வேண்டும் என, நுகர்வோர் வலியுறுத்தி வருகின்றனர். உத்திரமேரூர் ஒன்றியம், களியாம்பூண்டியில் அரசு தொடக்கப்பள்ளி எதிரே, திங்கள்கிழமைதோறும் வாரச்சந்தை நடந்து வருகிறது. ஊராட்சி சார்பில், வாரச்சந்தையில், 100 பேருக்கு கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வாரச்சந்தை நடக்கும் இடத்தில் உள்ள கடைகளுக்கு, கூரை இல்லாமல் உள்ளது. இதனால், மழை மற்றும் வெயில் நேரங்களில் வாரச்சந்தைக்கு வரும் நுகர்வோர் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், மழையின் போது சந்தை நடக்கும் இடம் சகதியாக மாறி விடுகிறது. இதனால், கடையை நடத்த முடியாத சூழல் உள்ளது. எனவே, வாரச்சந்தைக்கு கான்கிரீட் தரை அமைத்து, அங்குள்ள கடைகளுக்கு தகரத்தால் கூரை அமைக்க, ஊரக வளர்ச்சி துறையினரை, நுகர்வோர் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் சூரியா கூறியதாவது: களியாம்பூண்டி பகுதியில் உள்ள வாரச்சந்தை கடைகளுக்கு தகர கூரை அமைக்க, நுகர்வோர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நேரில் சென்று பார்வையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ