சிசிடிவி கேமராவை சீரமைக்க வலியுறுத்தல்
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையிலும், குற்ற செயலில் ஈடுபடுவோரை எளிதில் கண்டறியும் வகையிலும் மாவட்டம் முழுதும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியிலும், மற்றும் முக்கிய சாலை சந்திப்புகளில், 'சிசிடிவி' கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.இதில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேற்கு மாட வீதியில், 'சிசிடிவி' கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில், உள்ள ஒரு கேமரா தலை சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால், இப்பகுதியில் ஏதேனும் குற்ற சம்பவம் நடந்தாலும், குற்ற செயலில் ஈடுபட்டு தப்பி செல்வோரை கண்டறிவதில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது.இதனால், இப்பகுதியில், 'சிசிடிவி' கண்காணிப்பு கேமராக்கள் அமைத்ததின் நோக்கமே வீணாகும் சூழல் உள்ளது.எனவே, வரதராஜ பெருமாள் மேற்கு மாட வீதியில், தலை சாயந்த நிலையில் உள்ள, 'சிசிடிவி' கண்காணிப்பு கேமராவை சீரமைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.