உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வேகவதியாறு  பால சாலையில் இரும்பு சட்டங்கள் மாயம்

வேகவதியாறு  பால சாலையில் இரும்பு சட்டங்கள் மாயம்

கீழ்கதிர்பூர்:காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாறு பாலத்தில் இருந்து, கீழ்கதிர்பூர் வழியாக, கீழம்பி செல்லும் புறவழிச்சாலை 8 கி.மீ., நீளம் உள்ளது.உத்திரமேரூர், வந்தவாசி பகுதியில் இருந்து வேலுார், பெங்களூரு, அரக்கோணம், சென்னை செல்லும் கனரக வாகனங்கள் காஞ்சிபுரம் நகருக்குள் செல்லாமல் கீழம்பி புறவழிச் சாலை வழியாக சென்று வருகின்றன.இதில், கீழ்கதிர்பூர் அருகில், வேகவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பால சாலையின் இணைப்பு பகுதியில், தண்டவாளம் போல அமைக்கப்பட்டுள்ள இரும்பு சட்டங்கள் 10 இடங்களில் பெயர்ந்து மாயமாகியுள்ளன.மேலும், சில இரும்பு சட்டங்கள் பெயர்ந்து தள்ளாடும் நிலையில் உள்ளது. இதனால், இவ்வழியாக செல்லும் கனரக வாகனங்களால் பாலம் சேதமடைந்து நாளடைவில் வலுவிழக்கும் சூழல் உள்ளது.எனவே, பால சாலையின் இணைப்பு பகுதியில், இரும்பு சட்டங்களை மீண்டும் பொருத்தவும், தள்ளாடும் சட்டங்களை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ