உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கல மாதந்தோறும் போராட்டம் நடத்தும் அவலம்

துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கல மாதந்தோறும் போராட்டம் நடத்தும் அவலம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில், சுகாதார பிரிவின் கீழ், நிரந்தர துப்புரவு பணியாளர்கள் 100 பேரும், ஒப்பந்த அடிப்படையில் 400 பேரும் பணியாற்றி வருகின்றனர்.ஒப்பந்த பணியாளர்களுக்கு, கையுறை, பாதுகாப்பு ஜாக்கெட் போன்ற உபகரணங்கள் சரிவர வழங்குவதில்லை என, ஏற்கனவே துப்புரவு பணியாளர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.இந்நிலையில், மாத சம்பளமும் சரிவர வழங்காததால், ஒவ்வொரு மாதமும் துப்புரவு பணியாளர்கள் மறியல் செய்வதும், பணி புறக்கணிப்பு செய்வதும் தொடர்கிறது.ஜூலை மாதத்திற்கான சம்பளம் தரவில்லை என, கடந்த ஆக., 14ல், நெல்லுக்கார தெருவில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அதிகாரிகள் சமாதானம் செய்ததால், பணிக்கு திரும்பினர். அதையடுத்து, ஒரு சில நாட்களில் சம்பளம் வழங்கப்பட்டது.இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்திற்கான சம்பளம் தரப்படவில்லை என, காஞ்சிபுரம் அண்ணா அரங்கம் எதிரே ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் செய்தனர். சாலையை மறித்து வாகனங்கள் செல்ல முடியாதபடி நின்றனர். பணி புறக்கணிப்பு செய்ய போவதாகவும் தெரிவித்தனர்.தகவலறிந்து வந்த சிவகாஞ்சி போலீசார் மற்றும் மாநகராட்சி சுகாதார அலுவலர் அருள்நம்பி உள்ளிட்டோர், துப்புரவு பணியாளர்களுடன் பேச்சு நடத்தினர்.ஒன்றிரண்டு நாட்களில் சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் உறுதியளித்த பின், போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை