உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கலாம் பிறந்த நாள் விழா 1,093 பனை விதைகள் நடவு

கலாம் பிறந்த நாள் விழா 1,093 பனை விதைகள் நடவு

காஞ்சிபுரம்:டாக்டர் கலாம் வழியில் உதவும் கரங்கள் தன்னார்வ அமைப்பு சார்பில், முன்னாள் ஜனாதிபதி கலாமின், 93வது பிறந்த நாள் விழா திருக்காலிமேட்டில் நேற்று நடந்தது. இதில், கலாமின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் துாரி மரியாதை செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு கேக் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது..அதை தொடர்ந்து, காஞ்சிபுரம் அல்லாபாத் ஏரிக்கரை சாலையோரம் 93 விதைப்பந்துகள், பழம் மற்றும் நிழல் தரும் 93 மரக்கன்றுகள் நடவு செய்து கலாம் பிறந்த நாள் விழாவை கொண்டாடினர்.வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள காஞ்சிபுரம் மாவட்ட சாலையோரம், டாக்டர் கலாம் வழியில் உதவும் கரங்கள் தன்னார்வ அமைப்பினர், 1,000 விதைப்பந்துகளை தயாரித்து வைத்துள்ளனர். அவை காய்ந்தவுடன், நடவு செய்யும் பணியில் ஈடுபடுவர். மதியம் சாலையோரம் உள்ள ஆதரவற்றவர்களுக்கு மதிய உணவு வழங்கினர்.கீழ்கதிர்பூரைச் சேர்ந்த பசுமை இந்தியா சுற்றுச்சூழல் தன்னார்வ அமைப்பு மற்றும் சர்வம் தன்னார்வ அமைப்பு சார்பில், கலாம் பிறந்த நாள் விழாவையொட்டி, மேல்கதிர்பூரில் புதிதாக அமைக்கப்பட்ட குளக்கரையை சுற்றிலும், 1,000 பனை விதைகள் நடவு செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !