காஞ்சி புகார் பெட்டி சாலையோர குப்பையால் சுகாதார சீர்கேடு
காஞ்சிபுரம், பெரியார் நகரில் இருந்து, தேனம்பாக்கம், ஓரிக்கை வழியாக செவிலிமேடு செல்லும் மிலிட்டரி சாலை உள்ளது. இச்சாலை கனரக வாகன போக்குவரத்து நிறைந்தது. திருமண மண்டபங்களில் இருந்து வெளியேற்றப்படும் உணவு கழிவு, பிளாஸ்டிக் டம்ளர் உள்ளிட்ட குப்பை, சின்ன அய்யங்குளம் அருகில் சாலையோரம் கொட்டப்படுகிறது. குவியலாக உள்ள குப்பையை மாநகராட்சி நிர்வாகம் அகற்றாததால், காற்றில் பறந்து சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, மிலிட்டரி சாலையோரம் உள்ள குப்பையை அகற்றி, அப்பகுதியில் குப்பை கொட்ட மாநகராட்சி நிர்வாகம் தடை விதிக்க வேண்டும். - ஏ.குணசேகரன், காஞ்சிபுரம்.