உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி டி.எஸ்.பி., பணிக்கு திரும்பினார்

காஞ்சி டி.எஸ்.பி., பணிக்கு திரும்பினார்

காஞ்சிபுரம்:வாலாஜாபாத் அருகே உள்ள பூசிவாக்கம் கிராமத்தில் பேக்கரி நடத்தி வருபவர் சிவகுமார். இவருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில், சிவகுமாரின் மருமகனான போலீஸ்காரர் லோகேஷ்குமார் ரவி, முருகனை தாக்கியுள்ளார். இதில், போலீஸ்காரர் லோகேஷ்குமார் ரவி உட்பட நான்கு பேர் மீது, எஸ்.சி., - எஸ்.டி., பிரிவில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில், நான்கு பேரையும் ஏன் கைது செய்யவில்லை என கேட்டு, காஞ்சிபும் டி.எஸ்.பி.,சங்கர்கணேஷை, நீதிமன்ற காவலில் அடைக்க, மாவட்ட முதன்மை நீதிபதி செம்மல், உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக, டி.எஸ்.பி.,சங்கர்கணேஷ் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், டி.எஸ்.பி.,யின் கைது உத்தரவுக்கு ரத்து செய்தும், வழக்கு விசாரணைக்கு தடை விதித்தும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நெஞ்சுவலி காரணமாக, செங்கல்பட்டில் சிகிச்சை பெற்று வந்த டி.எஸ்.பி.,சங்கர்கணேஷ், எஸ்.பி.,சண்முகத்தை நேற்று சந்தித்து பணிக்கு திரும்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை