உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  சிதிலமடைந்த கழிப்பறையை அகற்றி புதிதாக கட்ட காஞ்சி மக்கள் வலியுறுத்தல்

 சிதிலமடைந்த கழிப்பறையை அகற்றி புதிதாக கட்ட காஞ்சி மக்கள் வலியுறுத்தல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வேகவதி நதி சாலையில் சிதிலமடைந்துள்ள நிலையில் உள்ள பழைய கழிப் பறையை அகற்றிவிட்டு, புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் வேகவதி நதி சாலையில், 15 ஆண்டுகளுக்கு முன், பொது கழிப்பறை கட்டப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் கழிப்பறையில் தண்ணீர் வசதிக்காக அமைக்கப்பட்ட மின்மோட்டார் பழுதடைந்தது. மின்மோட்டாரை பழுதுநீக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. கழிப்பறைக்கு தண்ணீர் வசதி இல்லாததால், அப்பகுதி மக்கள் பொது கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. பராமரிப்பு இல்லாததால், கழிப்பறை கட்டடம் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. எனவே, சிதிலமடைந்த நிலையில் உள்ள பழைய கழிப்பறை கட்டடத்தை அகற்றிவிட்டு, புதிய கட்டடம் கட்ட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ