உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி உலகளந்த பெருமாள் ஹம்ச வாகனத்தில் உலா

காஞ்சி உலகளந்த பெருமாள் ஹம்ச வாகனத்தில் உலா

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில், 54வது திவ்யதேசமாக விளங்குகிறது. பல்வேறு சிறப்பு பெற்ற இக்கோவிலில், ஆண்டு தோறும் தை மாதத்தில் பிரம்மோற்சவம், 10 நாட்கள் விமரிசையாக நடக்கும். அதன்படி, நடப்பு ஆண்டுக்கான தைமாத பிரம்மோற்சவம் நேற்று முன்தினம் காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.தொடர்ந்து, ஸ்ரீதேவி, பூதேவியருடன் சப்பரத்தில் எழுந்தருளிய உலகளந்த பெருமாள், நான்கு ராஜ வீதிகளிலும் வீதியுலா வந்தார். இரவு சிம்ம வாகனத்தில் எழுந்தருளி உலா வந்தார். பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாள் உற்சவமான நேற்று காலை, ஹம்ச வாகனத்திலும், இரவு சூரிய பிரபையிலும் உலகந்த பெருமாள் வீதியுலா வந்தார். மூன்றாம் நாள் உற்சவமான இன்று, காலையில் கருடசேவை உற்சவமும், இரவு ஹனுமந்த வாகன உற்வசமும் நடக்கிறது. நாளை நான்காம் நாள் உற்சவத்தில், காலையில் சேஷ வாகனமும், இரவு சந்திர பிரபை உற்சவமும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி