உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம்: புகார் பெட்டி; மண் அரிப்பால் சாலையில் பள்ளம்

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; மண் அரிப்பால் சாலையில் பள்ளம்

மண் அரிப்பால் சாலையில் பள்ளம்காஞ்சிபுரம் ஒன்றியம், காலுார் ஊராட்சி, பெரியநத்தம் கிராமத்தில் ஆசூர் செல்லும் சாலையில், கொளத்துார் கிராமம் அருகில் சாலையின் குறுக்கே மழைநீர் செல்லும் சிறுபாலம் உள்ளது.இந்த சிறுபாலத்தை ஒட்டியுள்ள பகுதியில், மண் அரிப்பால் சாலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. தெரு மின்விளக்கு வசதி இல்லாத அப்பகுதியில், இரவு நேரத்தில் இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போது பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.எனவே, சாலையோர பள்ளத்தில் மண்ணை கொட்டி நிரப்பி, சிறுபாலம் உள்ள பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எம்.மோகனசுந்தரம்,காஞ்சிபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ