மேலும் செய்திகள்
சேதமான மின் கம்பம் விபத்து அச்சம்
12-Aug-2024
குன்றத்துார் ஒன்றியம், வைப்பூர் ஊராட்சி, வெள்ளேரித்தாங்கல் கிராமம், கக்கன்ஜி தெருவில் 20க்கும் அதிகமான வீடுகள் உள்ளன.இந்த தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து, சிமென்ட் காரை உடைந்து, இரும்புக் கம்பி வெளியே தெரியும் நிலையில் எலும்புக் கூடாக காட்சியளிக்கிறது.குடியிருப்பு மத்தியில் விழும் நிலையில் மின்கம்பம் உள்ளதால், அப்பகுதியினர் அச்சத்தில் உள்ளனர்.எனவே, மின்கம்பத்தை மாற்றி அமைக்க, மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ரா.முத்து,வெள்ளேரித்தாங்கல்.
12-Aug-2024