காஞ்சிபுரம்; புகார் பெட்டி ; குண்டும் குழியுமான தார் சாலை
குண்டும் குழியுமான தார் சாலை
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 16வது வார்டில், கச்சி மாட வீதியில், தார் சாலை மோசமாக உள்ளது. இவ்வழியாக, பள்ளிக்கும், வேலைக்கும் ஏராளமானோர் செல்கின்றனர்.சாலை முழுதும் சேதமாகி, குண்டும் குழியுமாக காணப்படுவதால், மாணவர்கள் விழுந்து பாதிக்கும் சூழல் உள்ளது. மாநகராட்சி நிர்வாகம், இச்சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எம்.சுரேஷ்,பிள்ளையார்பாளையம்.