காஞ்சிபுரம்: புகார் பெட்டி ; சிதிலமடைந்த மின்கம்பம்
சிதிலமடைந்த மின்கம்பம்
உத்திரமேரூர் ஒன்றியம், களியாம்பூண்டியில் இருந்து, இளநகர் செல்லும் சாலையோரம் அப்பகுதியில் உள்ள வீடுகள், விவசாய நிலங்களுக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக சாலையோரம் மின்தட பாதைக்கான மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ன.இதில், மேல்பாக்கம் அருகில் உள்ள ஒரு மின்கம்பத்தில் சிமென்ட் காரை உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளது.ஆபத்தான நிலையில் உள்ள இந்த மின்கம்பம் பலத்த காற்றுடன் மழை பெய்தால் நொறுங்கி விழுந்து விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.நடராஜன்,உத்திரமேரூர்.