வள்ளி, தெய்வானை சமேத முருகன் ஐம்பொன் சிலைகள் கரிகோல ஊர்வலம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா கோவிலில், புதிதாக செய்யப்பட்ட ஐம்பொன் வள்ளி, தெய்வானை சமேத முருகன் சிலைகள் கரிகோல ஊர்வலம் நேற்று நடந்தது. காஞ்சிபுரம் ஆலடி பிள்ளையார்கோவில் தெருவில் உள்ள பாலதர்ம சாஸ்தா கோவிலில், 8ம் ஆண்டு பிரதிஷ்டை தினம், திருக்கல்யாண உத்சவம் நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இரண்டாம் நாள் உத்சவமான நேற்று, காலை 8:30 மணிக்கு பாலதர்ம சாஸ்தாவிற்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. காலை 10:45 மணிக்கு புதிதாக செய்யப்பட்ட வள்ளி, தெய்வானை, முருகன் ஐம்பொன் சிலைகள் கரிகோல ஊர்வலம் முக்கிய வீதி வழியாக நடந்தது. இரவு 7:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கல்யாண உத்சவமும், தொடர்ந்து வீதியுலாவும் நடந்தது.