மேலும் செய்திகள்
அம்மன் கோவில்களில் தை அமாவாசை சிறப்பு பூஜை
30-Jan-2025
சாகை வார்த்தல் விழா
15-Jan-2025
உத்திரமேரூர், உத்திரமேரூர் ஒன்றியம், இராவத்தநல்லுார் கிராமத்தில், ஆலடி அம்மன், கருமாரியம்மன், கங்கையம்மன் ஆகிய கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில், நேற்று, கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது.முன்னதாக, காலை 5:30 மணிக்கு, மங்கள இசை, விக்னேஷ்வர பூஜை, மஹா பூர்ணாஹிதி ஆகியவை நடந்தது. தொடர்ந்து, 9:30 மணிக்கு, யாக சாலையில் இருந்து, பூஜிக்கப்பட்டநீர் கொண்டு செல்லப்பட்டு, ஆலடி அம்மன், கருமாரியம்மன், கங்கையம்மன் ஆகிய கோவில்களின் மீதுள்ள கோபுர கலசங்கள் மீது ஊற்றி, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.இதில், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து,பக்தர்கள் பங்கேற்றனர்.
30-Jan-2025
15-Jan-2025