உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / விச்சூர் விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை

விச்சூர் விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை

உத்திரமேரூர்: விச்சூர் செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா, விமரிசையாக நடந்தது. உத்திரமேரூர் தாலுகா, விச்சூர் கிராமத்தில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த கிராமத்தினர் முடிவு செய்தனர். அதன்படி, கோவில் புதுப்பிக்கும் பணிகள் கடந்த மாதம் முடிந்தன. இதையடுத்து, செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று விமரிசையாக நடந்தது. முன்னதாக, காலை 8:00 மணிக்கு, மஹா கணபதி ஹோமம், தன பூஜை, கோ பூஜை நடந்தது. காலை 10:00 மணிக்கு, யாக சாலையில் இருந்து பூஜிக்கப்பட்ட கலச நீரை, வேதமந்திரங்கள் முழங்கியவாறு, மூலவரின் சிலை மீது ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி அருள் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி