மேலும் செய்திகள்
இன்று இனிதாக
23-Nov-2024
காஞ்சிபுரம்:காஞ்சிபரம் ஆலடி பிள்ளையார் கோவில் தோப்பு தெருவில், பழமையான வெற்றி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் செய்து முடிக்கப்பட்டன. கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று காலை 6:00 மணிக்கு பந்தக்கால் நடும் நிகழ்வு நடந்தது. இன்று இரவு 7:00 மணிக்கு, புதிதாக வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு அஷ்டபந்தனம் சாற்றப்படுகிறது.நாளை காலை 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி, லஷ்மி ஹோமம், காலை 9:45 மணிக்கு வேதவிற்பன்னர்கள் கோவில் கோபுர விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைக்கின்றனர்.காலை 11:00 மணிக்கு மஹா அபிேஷகமும், தீப ஆராதனையும் நடக்கிறது. காலை 11:30 மணிக்கு பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கும் நிகழ்வும், இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதியுலாவும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாட்டை ஆலடி பிள்ளையார் கோவில் தோப்பு தெருவார்கள், பொதுமக்கள், பக்தர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.
23-Nov-2024